முழு கம்பேக்!
"மதராஸி'’ படம் மூலம் கம்பேக் கொடுக்க நினைத்த ஏ.ஆர்.முருகதாஸ், அதில் பாதி அளவு வென்றிருக்கிறார். படத்தின் வரவேற்பு அவருக்கு முழு திருப்தியை கொடுக்கவில்லை. அதனால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் படம் பண்ண முயற்சித்து வருகிறார். இதற்காக சிவகார்த்திகேய னிடம் க்ரீன் சிக்னலும் பெற்றுவிட்ட அவர், தற்போது சிவகார்த்திகேயனுக்காக ஒரு புதிய கதையை தயார் செய்து வருகிறார். இதில் அவருடைய முந்தைய ஹிட் படங்களில் இருக்கும் ஒரு சென்சேஷனலான விஷ யத்தை கொண்டு வர முடிவெடுத்துள்ளார். அதாவது அவருடைய கஜினி படத்தில் இடம்பெறும் மறதி நோய், 7ஆம் அறிவு படத்தில் வரும் போதிதர்மர், துப்பாக்கி படத்தில் வரும் ஸ்லீப்பர் செல், சர்கார் படத்தில் வரும் 49 பி- பிரிவு ஆகியவை போல் புதிதாக பரபரப்பாக பேசும் அளவிற்கு ஒன்றை இணைக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக தேவையான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு பொறுமையாக செயல்பட திட்டமிடும் அவர், அந்த படம் மூலம் முழு கம்பேக் கொடுக்க பிளான் செய்துள்ளார்.
530 கோடியாம்!
பாலிவுட்டில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு படம் உருவாகிறது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியூ யார்க், பாரிஸ், லண்டன் மற்றும் துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இளம் அமெரிக்க நட்சத்திரம் ஒரு இந்திய பிரபலத்தை காதலிக்கும் கதாபாத்திரம் இருக்கிறது. இதற்காக பிரபல இளம் ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியை படக்குழு அணுகியுள்ளது. இப்படத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இப்படத்திற்காக சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளம் தருவதாக ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.415 கோடி நடிப்புக்கான சம்பளமாகவும், ரூ.115 கோடி விளம்பர ஒப்பந்தங்களுக்காகவும் கொடுப்பதாக பேசப்பட்டுள்ளது. இதைக் கேட்ட சிட்னி ஸ்வீனி வாயடைத்துப் போய்விட்டார். ஏனென்றால் அவர் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட 15 சதவீதம் அதிகமாம். ஆனால் அவர் இன்னும் படக்குழுவிற்கு பதில் சொல்லவில்லை. அவருக்கு வரிசையாக படங்கள் இருப்பதால் தற்போது யோசித்து வருகிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/23/tt1-2025-09-23-12-19-01.jpg)
ட்ரோல்!
சமீப காலமாக அதிகம் லைம்லைட்டில் இல்லாத பிரியங்கா மோகன், அவரது நடிப்பில் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ஓஜி’ பட புரொமோஷனால் அதிகம் கவனிக்கப் படுகிறார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அவர் குறித்து வரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் குறித்து பேசியுள் ளார். “என்னைப் பற்றி வரும் ட்ரோல்கள் அனைத்தும் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டவை, என்னை பிடிக்காதவர்களும் வெறுப்பவர்களும் இதுபோன்று நெகட்டிவ் மீம்ஸ்களை போட சொல்லி பணம் கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் யார் என எனக்கு தெரியவில்லை. பணம் வாங்கி மீம்ஸ் போடுபவர்களுக்கு வேண்டுமானால் தெரியலாம். ஆனால் ட்ரோல் மற்றும் மீம்ஸ் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. அவைதான் என்னை வலிமைப்படுத்துகின்றன. அதுபோக என் சோசியல் மீடியா கணக்குகளை நான் கையாள்வதில்லை. அது தேவையில்லாத விஷயம் என நினைக்கிறேன். அதனால் என் கணக்குகளை என் டீம் தான் கையாள்கிறார்கள்''’என்றார்.
ரொமான்ஸ் காமெடி!
மோகன் குருசெல்வா இயக்கத்தில் தர்ஷன் மற்றும் கௌதம் மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘"காட்ஸ்ஜில்லா.' இதில் அலிஷா மிரானி, கே.பி.ஒய். வினோத், பிளாக் பாண்டி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், தினேஷ்ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரி பியூட்டர்ஸ் ஜி.தனஞ்ஜெயன் மற்றும் பி.ஜி.எஸ். புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவா கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/23/tt-2025-09-23-12-18-28.jpg)